"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது "காலம் அறிதல் எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் இயற்றிய முதல் குறட்பா இது. வெற்றி தோல்விக்கு காலத்தை புரிந்து கொண்டு காத்திருத்தல் வேண்டும் என்பதை எளிமையான உவமை மூலமாக விளக்குகிறார்.
இந்த நகர்வில் அரோனியான் 36.Rc2!? என்று விளையாடினார் .காலம் கருதி காத்திருந்தாரஂ . எதிராளி பொறுமையை இழநஂது 36...Bf8? எனஂறாரஂ, பிறகு37.Bc6! Nb8 38. Be8! என்று ஆட்டம் நகர்ந்தது. f7 கட்டத்தின் பலவீனத்தினால் வெள்ளைப் படை வெற்றியும் கண்டார்.
எப்படி காகம் அதை விட வலிமையான ஆந்தயை பகற்பொழுதில் வெல்லுமோ அதே போல் ஒரு நல்ல அரசனுக்கு பகையை வெல்ல சரியான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.
சிறு வயதிலிருந்து எனக்கு சதுரங்க விளையாட்டில் ஈடுபாடு உண்டு.சொல்லப் போனால் பெருமளவு சிந்தனையோட்டம் அதை சார்ந்தே இருக்கும்.
சதுரங்கம் என்பதே வாழ்வின் ஒரு சிறிய மாதிரி தான் என்பது பல சான்றோர்களின் கருத்து. ரஷ்யாவின் தலை சிறந்த சதுரங்க வீரர் Kasparov ' How Life Imitates Chess ' என்று ஒரு நூல் எழுதியுள்ளார். என் பட்டறிவும் அதையே எனக்கு உணர்த்துகிறது. அதனால் சதுரங்க விளையாட்டு அனுபவம் வாழ்விற்கும், வாழ்வின் கற்றல் சதுரங்கத்திற்கும் மிகவும் இலகுவாக பொருந்துகிறது!
Aronian-Jakavenko 2010 olympiad |
இந்த நகர்வில் அரோனியான் 36.Rc2!? என்று விளையாடினார் .காலம் கருதி காத்திருந்தாரஂ . எதிராளி பொறுமையை இழநஂது 36...Bf8? எனஂறாரஂ, பிறகு37.Bc6! Nb8 38. Be8! என்று ஆட்டம் நகர்ந்தது. f7 கட்டத்தின் பலவீனத்தினால் வெள்ளைப் படை வெற்றியும் கண்டார்.
சமீபத்தில் காளமேகப் புலவரின் செய்யுளை படித்தேன்
"காக்கைகா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா "
தாய் மொழி தமிழாய் இருப்பினும், நான் ஆங்கில வழியில் பள்ளியில் பயின்றதால் இலக்கண அறிவு எனக்கு சுத்தமாக கிடையாது! அதனால், முதல் பார்வைக்கு (எனக்கு) விளங்க முடியா கவிதையாகவே தோன்றியது.
இருப்பினும் இந்த வரிகளின் மீதுள்ள ஈர்ப்பின்பால் இணையத்தில் தேட முயன்றேன்.பல முறை வாசித்த பின் கொஞ்சம் விளங்கத் தொடங்கியது.
என் புரிதலுக்கு எட்டிய படி, இவ்வாறு பொருள் பட்டது:
காக்கைக்கும் கூகைக்கும் ஆகாது . காலம் தான் எது வெற்றி பெரும் என்பதை நிர்ணயிக்கும் (பகற்பொழுதா அல்லது இரவா ). அரசர்க்கு தன் நாட்டை காப்பதற்கு கொக்கு போல காத்திருக்கும் திறன் வேண்டும் (ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் ). அப்படி காலம் கைகூடி வர வில்லை என்றால் திறமை வாய்ந்த அரசரால் கூட வெற்றி வாகை சூட முடியாது.
முடிவாக காலம் அறிதல் எனும் கருத்து எனக்கு இன்னும் இரண்டு சதுரங்க ஆட்டங்களை நினைவூட்டியது. அவைகளின் உச்சகட்டங்கள் பின்வருமாறு
இரு இடங்களிலும், காத்திருந்த வெள்ளை வீரர்கள் எதிராளியை எதிர்பாராவண்ணம் 56.Ka2!! மற்றும் 47.Ng2!! வைத்து வென்றனர்.
வலைதளக் குறிப்புகள் :-
1. http://view.chessbase.com/cbreader/2020/8/16/Game281510812.html (சதுரங்க ஆட்டங்கள் )
Excellent Harish. Deep thought.well presented. Your Tamil knowledge is overwhelming and progressing in good speed. Keep trying.
ReplyDeleteThank You.
DeleteSuper
ReplyDelete